சாதிக்க உதவிய சச்சின் பேட் | ஆகஸ்ட் 03, 2020

தினமலர்  தினமலர்
சாதிக்க உதவிய சச்சின் பேட் | ஆகஸ்ட் 03, 2020

கராச்சி: ‘‘சச்சின் கொடுத்த பேட்டை பயன்படுத்தி அதிவேக சதம் அடித்து அசத்தினார் அப்ரிதி,’’ என அசார் மகமூது தெரிவித்தார்.

பாகிஸ்தான் அணி முன்னாள் ‘ஆல் ரவுண்டர்’ அப்ரிதி. ஒருநாள் அரங்கில் தனது இரண்டாவது போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக அதிவேக சதம் (37 பந்தில், 1996) அடித்து சாதித்தார். 18 ஆண்டுகள் கழித்து நியூசிலாந்தின் கோரி ஆண்டர்சன் (36 பந்து) இதை தகர்த்தார். 

அடுத்த ஒரு ஆண்டில் தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ் 31 பந்தில் சதம் அடித்து தற்போது சாதனையாக உள்ளது. இதுகுறித்து அப்ரிதியில் சக பாகிஸ்தான் வீரர், முன்னாள் ‘ஆல் ரவுண்டர்’ அசார் மகமூது கூறியது:

நைரோபி தொடரில் அப்ரிதிக்கு அறிமுக வாய்ப்பு கிடைத்தது. இலங்கையின் துவக்க வீரர்கள் வேகமாக விளையாடியதால், எங்கள் அணியில் யாராவது ஒருவர் அப்படி விளையாடினால் நன்றாக இருக்கும் என நினைத்தோம். 

முதல் போட்டியில் அப்ரிதி பேட்டிங் செய்யவில்லை. அடுத்த போட்டியில் மூன்றாவது வீரராக களமிறங்கினார். அப்போது சச்சினிடம் இருந்து பெற்ற வக்கார் யூனிஸ் பெற்ற பேட்டை வைத்து, அப்ரிதி பேட்டிங் செய்தார். பவுலரான இவர், 37 பந்தில் சதம் விளாசி மிரட்ட, சிறப்பான எதிர்காலம் அமைந்தது.

இவ்வாறு அவர் கூறினார். 

மூலக்கதை